நீதி பெறும் உரிமை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து
January 16 , 2025 40 days 91 0
நீதி கிடைப்பதை உறுதி செய்யும் உரிமையானது நிபந்தனையற்றது அல்ல என்றும் அது பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் 11 ஆண்டுகளுக்கும் மேலாக தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுப்பதற்காக, சட்டத் தீர்வு முறைகளை மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வானது, நீதி கிடைப்பதை உறுதி செய்வது என்பது இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை என்று கூறியது.