TNPSC Thervupettagam

நீதித்துறைப் பரிமாற்றப் பிரதேசம்

January 23 , 2020 1676 days 636 0
  • 1908 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குடிமையியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 44A இன் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தினை ஒரு "நீதித்துறைப் பரிமாற்றப் பிரதேசமாக" அறிவித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகமானது ஒரு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • சட்டப் பிரிவு 44A ஆனது இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளை வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரிப்பது தொடர்பாகவும்  வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியாவில் விசாரிப்பது தொடர்பாகவும்  அதிகாரத்தை வழங்ககி வறுகின்றது.
  • இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நீதிமன்றங்களின் பட்டியலை “மேல்மட்ட நீதிமன்றங்கள்” என்று அறிவித்தது.
  • இந்த அறிவிப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வழக்குகளை விசாரிக்கத் தேவையான நேரத்தைக் குறைக்க முடியும் என்று நம்பப் படுகின்றது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் அந்த நாட்டில் ஒரு குடிமையியல் வழக்கில் தண்டனை பெற்றால் அதன் பிறகு தங்களது சொந்த நாட்டில் பாதுகாப்பான புகலிடத்தை அவர்களால் நாட முடியாது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர, இந்தியாவின் "நீதித்துறைப் பரிமாற்றப் பிரதேசம்" என்று அறிவிக்கப்பட்ட பிற நாடுகளாவன: ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், வங்க தேசம், மலேசியா, டிரினிடாட் & டொபாகோ, நியூசிலாந்து, குக் தீவுகள் (நியு உட்பட) மற்றும் மேற்கு சமோவாவின் ஆட்சிப் பகுதிகள், ஹாங்காங், பப்புவா நியூ கினியா, பிஜி, ஏடன் போன்ற பகுதிகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்