96 வயதான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி V. இராமசாமி சமீபத்தில் காலமானார்.
1962 ஆம் ஆண்டு கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், 1969 ஆம் ஆண்டில் மாநில அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.
1971 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
அவர் 1987 ஆம் ஆண்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், மிக அதிகச் செலவினம் செய்ததற்காக அவருக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது, ஆனால் 1993 ஆம் ஆண்டு அந்தத் தீர்மானம் தோல்வியுற்றது.