TNPSC Thervupettagam

நீதிபதி சந்துரு கமிட்டி வழிகாட்டுதல்கள்

June 21 , 2024 10 days 172 0
  • கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே சாதி, சமூகம் சார்ந்த வன்முறைகளைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்காக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி K.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
  • மாணவர்கள் பயன்படுத்தும் நெற்றித் திலகக் குறிகள், வண்ண மணிக்கட்டுக் கயிறுகள் மற்றும் பிற சாதி அடையாளங்களைத் தடை செய்து, சமூக நீதி மாணவர் படையை (SJSF) அமைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • பள்ளிகளின் பெயர்களில் இருந்து சாதி முன்னொட்டுகள் நீக்கப்பட்டு, பள்ளிகளை அவற்றின் இருப்பிடத்தின் பெயருடன் கூடிய ‘அரசுப் பள்ளிகள்’ என்று அழைக்க வேண்டும்.
  • மேலும், நன்கொடையாளர் அல்லது அவர்களது குடும்பத்தைக் குறிக்கும் அரசுப் பள்ளிகளுடன் தொடர்புடைய அனைத்து சாதி முன்னொட்டு அல்லது பின்னொட்டு நீக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான பத்தியோ அல்லது விவரங்களோ இருக்கக் கூடாது.
  • தற்போதுள்ள 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தினைத் திருத்தி அமைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆரம்பக் கல்வி மீதான உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) மூலம் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முன் சமூக நீதிப் பிரச்சினைகளுக்கான அவர்களின் அணுகுமுறை கண்டறியப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
  • நிறுவனத் தலைவர் பதவியில் அந்தப் பகுதியில் ஆதிக்க நிலையில் உள்ள சாதியைச் சேர்ந்த நபர்களை நியமிக்கக் கூடாது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் உடன் வெளியிடப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்