TNPSC Thervupettagam
November 27 , 2023 217 days 288 0
  • இந்திய உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியான நீதிபதி M.பாத்திமா பீவி சமீபத்தில் காலமானார்.
  • உயர் மட்ட நீதித்துறையில் நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் நீதிபதியும் இவர் தான்.
  • இவர் வழக்குரைஞர் கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.
  • உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து, 71 ஆண்டுகளுக்கும் மேலாக, 1989 ஆம் ஆண்டில் M. பாத்திமா பீவி நியமிக்கப் பட்டதில் தொடங்கி இது வரையில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஓய்வு பெற்ற பிறகு, அவர் முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • பின்னர் 1997 ஆம் ஆண்டில் அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • ஆளுநர் பதவியை வகித்த முதல் முஸ்லிம் பெண் மற்றும் தமிழகத்தின் முதல் மற்றும் ஒரே பெண் ஆளுநர் இவரே ஆவார்.
  • இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகள் தாக்கல் செய்த கருணை மனுக்களை நிராகரித்த இவர் பின்னர் தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்