TNPSC Thervupettagam

நீதிபதி ராஜேஷ் பிந்தல் குழுவின் பரிந்துரைகள்

April 29 , 2018 2405 days 730 0
  • நீதிபதி ராஜேஷ் பிந்தல் (Justice Rajesh Bindal) தலைமையிலான குழு நாடுகளுக்கிடையேயான குழந்தைகளின் தக்கவைப்பு மற்றும் அனுப்புகை (inter country removal & retention of children) தொடர்பான சட்ட விவகாரங்கள் மீது தன்னுடைய அறிக்கையையும், அவை தொடர்பான தன்னுடைய பரிந்துரைகளையும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்திடம் (Ministry of Women and Child Development) சமர்ப்பித்துள்ளது.
  • இந்த குழுவானது நாடுகளுக்கிடையேயான பெற்றோர் சார்ந்த குழந்தைகள் கடத்துதல் பிரச்சினைகள் தீர்மான ஆணையத்தை (Inter Country Parental Child Removal Disputes Resolution Authority-ICPCRDRA) அமைக்கவும் மத்திய அரசிற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
  • இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி இருப்பார். முக்கிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளும், சட்டம் மற்றும் சமூகத் துறையில் ஈடுபாட்டுப் பின்னணிகளை கொண்டவர்களும் இந்த ஆணையத்தில் உறுப்பினர்கள் ஆவார்.
  • பெற்றோர் சார்ந்த பிரச்சினைகளினால் உண்டாகும் குழந்தைகளின் நாடுகளுக்கிடையேயான தடுப்பு மற்றும் நாடுகடத்துதல் பிரச்சினைகளுக்கு ஓர் இடத்தில் தீர்வு வழங்குவதற்காக (one window solution) இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த பரிந்துரைகளோடு இணைந்து ராஜேஷ் பிந்தல் குழுவானது சர்வதேச குழந்தைகள் கடத்தல் மசோதாவின் வரைவுச் சட்டத்தை (draft legislation- International Child Abduction bill) மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • தற்போது நடப்பில் குழந்தைகளை இந்தியாவிலிருந்தோ அல்லது இந்தியாவிற்கோ வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பெற்றோர்களால் உண்டாகும் பிரச்சினைகளிலிருந்து விடுவித்து இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பானப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு குறிப்பிடத்தகு சட்டமும் இல்லை.

நாடுகளுக்கிடையேயான குழந்தைகள் கடத்தல்-ஹேக் உடன்படிக்கை

  • இந்த சட்ட ஆணையமானது (Law Commission of India - LCI) 1980-ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் கடத்தலின் சமூக அம்சங்கள் மீதான ஹேக் உடன்படிக்கையில் (Hague Convention on Civil Aspects of International Child Abduction 1980) இந்தியாவின் இணைவிற்கு ஆதரவளிக்கவும், இந்தியாவின் இணைவு தொடர்பான பிரச்சினைகளை களையவும், சர்வதேச குழந்தைகள் கடத்தலின் சமூக அம்சங்கள்- 2016 (The Civil Aspects of International Child Abduction Bill, 2016) எனும் வரைவுச் சட்டத்தை தயார் செய்துள்ளது.
  • சர்வதேச குழந்தைகள் கடத்தலின் சமூக அம்சங்கள் மீதான ஹேக் உடன்படிக்கையில் 94 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
  • இந்த உடன்படிக்கையில் உறுப்பினராவதற்கு முன்பு உடன்படிக்கையில் கையெழுத்திட முனையும் நாடானது குழந்தைகளின் சர்வதேச கடத்தல் தொடர்பாக உள்நாட்டுச் சட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
  • இந்த ஹேக் உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் வாழ்விட குடியிருப்போராய் (habitual resident) உள்ள 16 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இந்த உடன்படிக்கை பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்