TNPSC Thervupettagam

நீதிபதிகளின் ஊதிய உயர்வு

November 24 , 2017 2588 days 769 0
  • ஓய்வுபெற்ற (ம) பணிபுரியும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள், படிநிலைகள், ஓய்வூதியம் போன்றவற்றை மறுபரிசீலனை செய்து உயர்த்துவதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நீதிபதிகளின் ஊதிய உயர்வு தொடர்பாக 7-வது ஊதியக் குழு ஆணையம் அளித்த பரிந்துரைகளின் பேரிலும் இந்த உயர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்,ஓய்வூதியம்,பணப்படிகள் போன்றவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியம் மற்றும் பணிநிலை) சட்டம்,1958 –ன் படி நிர்வகிக்கப்படுகின்றன.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்,ஓய்வூதியம்,பணப்படிகள் போன்றவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியம் மற்றும் பணிநிலை) சட்டம்,1954 –ன் படி நிர்வகிக்கப்படுகின்றன.
  • நீதிபதிகளின் ஊதியம்,ஓய்வூதியம், பணப்படிகள் போன்றவற்றை பரிசீலனை செய்து மாற்றம் கொண்டு வருவதற்கு மேற்கண்ட இச்சட்டங்களில் கட்டாய திருத்தம் தேவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்