நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கான விதிகள்
April 3 , 2025 8 hrs 0 min 26 0
இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொத்துக்கள் குறித்தத் தகவல்களை அறிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப் படி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளும், உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,100 நீதிபதிகளும் உள்ளனர்.
இவர்களில், சுமார் 98 நீதிபதிகள் மட்டுமே, அதிலும் மிகப்பெரும்பான்மையாக கேரளா, பஞ்சாப் - ஹரியானா மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மட்டுமே தங்கள் சொத்துக்கள் குறித்த தகவல்களை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தி உள்ளனர்.
1997 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றமானது, நீதிபதிகள் தங்கள் பெயர்கள், அவர்களின் மனைவியின் பெயர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்பவர்களின் பெயர்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் உட்பட அனைத்து விதச் சொத்துக்களையும் தலைமை நீதிபதி முன்பாக அவர்கள் அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை ஏற்றுக் கொண்டது.
இது நீதிபதிகளின் சொத்துக்களை பொது வெளியில் / மிகவும் பகிரங்கமாக வேண்டி வெளியிடுவதற்கான விதிமுறை எதுவும் அல்ல, மாறாக தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதனை வெளிப்படுத்துதல் ஆகும்.
2009 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஆனது நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தானாக முன்வந்து வெளியிட முடிவு செய்தது.
பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பாராளுமன்றக் குழுவானது, நீதிபதிகளின் சொத்துக்களைத் தாமாக அறிவிப்பதை ஒரு கட்டாயமாக்கும் சட்டத்தினைப் பரிந்துரைத்தது.