TNPSC Thervupettagam

நீதிபதியின் சொத்து குறித்த தகவல் வெளிப்பாடு

October 9 , 2024 2 days 38 0
  • நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள 749 நீதிபதிகளில், 98 பேரின் சொத்துக்கள் மட்டுமே சுய அறிவிப்புகள் மூலம் பொதுத் தளத்தில் உள்ளன.
  • மூன்று உயர் நீதிமன்றங்கள் இந்த சொத்து அறிவிப்புகளில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டுள்ளன.
  • கேரள உயர்நீதிமன்றம் அதன் இணையதளத்தில் உள்ள 39 நீதிபதிகளில் 37 பேரின் விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளதுடன் முதலிடத்தில் உள்ளது.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ஆனது சுமார் 55 நீதிபதிகளில் 31 பேரின் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது.
  • மூன்றாவதாக சுமார் 39 நீதிபதிகளில் 11 பேரின் விவரங்களை டெல்லி உயர்நீதிமன்றம் பதிவேற்றியுள்ளது.
  • தமிழ்நாட்டில் இருந்து சுமார் 62 பேரில் 5 நீதிபதிகளின் சொத்துத் தகவல்கள் மட்டுமே பதிவேற்றப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்