நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள 749 நீதிபதிகளில், 98 பேரின் சொத்துக்கள் மட்டுமே சுய அறிவிப்புகள் மூலம் பொதுத் தளத்தில் உள்ளன.
மூன்று உயர் நீதிமன்றங்கள் இந்த சொத்து அறிவிப்புகளில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டுள்ளன.
கேரள உயர்நீதிமன்றம் அதன் இணையதளத்தில் உள்ள 39 நீதிபதிகளில் 37 பேரின் விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளதுடன் முதலிடத்தில் உள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ஆனது சுமார் 55 நீதிபதிகளில் 31 பேரின் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது.
மூன்றாவதாக சுமார் 39 நீதிபதிகளில் 11 பேரின் விவரங்களை டெல்லி உயர்நீதிமன்றம் பதிவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சுமார் 62 பேரில் 5 நீதிபதிகளின் சொத்துத் தகவல்கள் மட்டுமே பதிவேற்றப் பட்டுள்ளது.