TNPSC Thervupettagam

நீரஜ் சோப்ரா – தங்கப் பதக்கம்

August 10 , 2021 1076 days 520 0
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கான தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 10மீ ஏர் ரைஃபில் பிரிவில் அபிநவ் பிந்த்ரா வென்ற தங்கப் பதக்கத்திற்குப் பிறகு இந்தியாவிற்குக் கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
  • நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தடகளப் போட்டிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இவர் ஹரியானாவின் பானிபட் எனும் இடத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கத்தோடு சேர்த்து மொத்தம் 7 பதக்கங்களோடு இந்தியா தனது 32வது ஒலிம்பிக் போட்டியின் பங்கேற்பினை நிறைவு செய்துள்ளது.
  • இதுவே கோடைகால ஒலிம்பிக் போட்டியில் இந்திய நாட்டின் சிறப்பான பங்கேற்பாக கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்