ஜப்பானின் விண்வெளி நிறுவனமானது, சந்திரனை நோக்கி அனுப்பப்பட்டுள்ள EQUULEUS எனப்படும் விண்கலத்தினை இயக்குவதற்கு உலகிலேயே முதன்முறையாக நீராவியினைப் பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது.
இது நாசாவின் ஓரியன் விண்கலத்தில் விண்வெளி சார்ந்தப் பொருட்களுள் ஒன்றாக ஏவப்பட்டது.
JAXA நிறுவனத்தின் கருத்துப் படி, நீர் சார்ந்த உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி புவி தாழ்மட்ட சுற்றுப்பாதைக்கு அப்பாற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் வெற்றிகரமான சுற்றுப்பாதை நிலை நிறுத்துதல் அமைப்பு இதுவாகும்.
இது தகவல்தொடர்பு கருவியில் இருந்து வெளியேறும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரை நீராவியாக மாற்றுவதோடு, அதற்கு ஒரு உந்துதலையும் உருவாக்குகிறது.
கியூப்சாட் செயற்கைக் கோளானது, தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில் பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இரண்டாவது லெக்ராஞ்சியன் பகுதியினை (EML2) அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
லெக்ராஞ்சியன் பகுதிகள் என்பது கோள்கள் போன்ற பெரிய பொருட்களின் ஈர்ப்பானது விண்கலத்தின் மைய விலக்கு விசையால் சமநிலைப்படுத்தப்பட்டு, மிகவும் நிலையான சுற்றுப்பாதையை மேற்கொள்ள வழிவகுக்கும் விண்வெளியில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களாகும்.