புனேயில் உள்ள IISER நிறுவனமானது, மாசுபட்ட நீரை திறம்பட சுத்தப்படுத்தும் திறன் கொண்ட தனித்துவமான மூலக்கூறான பஞ்சு போன்ற ஒரு பொருளை உருவாக்கி உள்ளது.
இந்தப் பொருளானது, பெரு/நுண்துளை அயனி கரிமக் கட்டமைப்பு எனப்படும் ஒரு பொருளாகும்.
இது கரிமச் சாயங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூச்சிக்கொல்லிகள், அயோடைடுகள் மற்றும் பெர்ஹனேட் போன்ற ஆக்ஸிஜன்-மாசுபடுத்திகள் உட்பட பலவிதமான நச்சுப் பொருட்களை உறிஞ்சி அகற்றும் திறன் கொண்டது.
இந்த மாசுக்கள் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு, அவை பொதுவாக நன்னீர் வளங்களில் காணப் படுகின்றன.