TNPSC Thervupettagam

நீரில் புளூரைடு கலப்பை நீக்குதல்

October 23 , 2017 2638 days 962 0
  • ஐதராபாத்தின் இந்திய ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயல்படுத்தப்பட்ட ஜாமூன் விதைப் பொடியை (நாவல்) பயன்படுத்தி குடிநீரிலுள்ள புளூரைடு கலப்பு அளவை WHO வின் புளூரைடு கலப்பு வரையறை அளவான லிட்டருக்கு 5 மில்லி கிராம் அளவைக் காட்டிலும் குறைவாக கொண்டு வந்துள்ளனர்.
  • செயல்படுத்தப்பட்ட நாவல் விதையானது குறைந்த PH ல் நேர்மறை மின்னூட்டத்தைப் பெறுகிறது. அமில கரைசலில் உள்ள எதிர்மறை மின்னூட்டமானது புளூரைடு அயனிகளை விலக்கும் போது செயல்படுத்தப்பட்ட நாவல் விதையின் நேர்மறை மின்னூட்டம் அவற்றை கவருகிறது.
  • PH ன் அளவு குறையும் போது புளூரைடு அயனிகளின் நீக்கம் அதிகரிக்கும். அதிகபட்ச புளூரைடு அயனிகளின் நீக்கம் PH 3ல் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் மோசமான புளூரைடு கலப்பு பாதிப்புடைய கிராமமான நால்கொண்டா கிராமத்திலிருந்து பெறப்பட்ட நிலத்தடி நீரில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த சோதனை மூலம் நிலத்தடி நீரின் புளூரைடு அளவு லிட்டருக்கு 5 மில்லி கிராம் என்ற அளவுக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்