நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுத்தலின் நிலை குறித்த அறிக்கை 2024
December 30 , 2024 23 days 67 0
உலக சுகாதார அமைப்பானது, நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுத்தலின் நிலை குறித்த தனது முதல் உலகளாவிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 2021 ஆம் ஆண்டில் சுமார் மூன்று லட்சம் பேர் (ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 30 பேர்) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய உயிரிழப்புகளில் 92% ஆனது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் (இந்தியாவை உள் அடக்கிய பகுதி) 83,000 உயிரிழப்புகள் அல்லது உலகளாவிய எண்ணிக்கையில் 28% பதிவாகியுள்ளது.
ஆனால் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் 2000 ஆம் ஆண்டு முதல் 38% அளவு குறைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியத்தில் இந்த எண்ணிக்கையில் 68% சரிவானது பதிவாகியுள்ள அதே நேரத்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் 48% அளவிற்குச் சரிவானது பதிவாகியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு பெரும் பங்கைக் கொண்டுள்ளது (24%) என்பதோடு, மேலும் 19% உயிரிழப்புகள் ஆனது ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மத்தியிலும், 14% உயிரிழப்புகள் 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் மத்தியிலும் பதிவாகியுள்ளது.
தற்போதையப் போக்குகள் இனி தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில், 7.2 மில்லியனுக்கும் அதிகமான அளவு மக்கள், முக்கியமாக குழந்தைகள், இந்த விபத்தின் காரணமாக உயிரிழக்க நேரிடும்.