TNPSC Thervupettagam

நீரிழிவு நோய் பற்றிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் ஆய்வறிக்கை

June 17 , 2023 402 days 210 0
  • இந்தியாவில் தற்போது 101 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 70 மில்லியனாக இருந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்ட நபர்களின் எண்ணிக்கையானது, நான்கு ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்து உள்ளது.
  • குறைந்த பட்சம் 136 மில்லியன் மக்கள் அல்லது 15.3% மக்கள் முன் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளா (25.5%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
  • இதில் இந்தியாவின் தேசியச் சராசரி 11.4% ஆகும்.
  • “கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள நீரிழிவு நோய்ப் பாதிப்புகளுடன்  ஒப்பிடச் செய்கையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையின் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் நீரிழிவு நோய்ப் பாதிப்பு 4.8% ஆக உள்ள நிலையில் இது இந்தியாவிலேயே மிகக் குறைவாகும்.
  • ஆனால் தேசியச் சராசரியான 15.3% உடன் ஒப்பிடுகையில் அந்த மாநிலத்தில் உள்ள நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையின் பாதிப்புகள் 18% ஆக உள்ளது.
  • நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான அளவை விட அதிகமாக இருந்தாலும், இரண்டாம் வகை நீரிழிவு நோயாகக் கருதப்படும் அளவிற்கு அதிகமாக இல்லாத ஒரு நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்