தமிழ்நாடு மாநிலமானது முதல் வகை நீரிழிவு நோய் பாதிப்பின் பதிவேட்டை உருவாக்கியுள்ளது.
இந்தப் பதிவேட்டில் உள்ள நோயாளிகள், இன்சுலின் சிகிச்சை உட்பட இலவசச் சிகிச்சையினைப் பெறுவார்கள்.
முதல் வகை நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும் என்ற நிலையில் இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆனது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது.
இது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழி வகுக்கிறது.
இந்தியாவில் 8.60 லட்சம் பேர் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்ற நிலையில் இது உலகிலேயே மிக அதிக அளவாகும்.