TNPSC Thervupettagam

நீரிழிவு நோய்க்கான திறன் மிகு இன்சுலின்

October 29 , 2024 24 days 88 0
  • அறிவியலாளர்கள், ஒருவரின் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப செயலாற்றுகின்ற ஒரு "திறன் மிகு" இன்சுலினை "அரிய" நீரிழிவு சிகிச்சைக்கு வேண்டி உருவாக்கியுள்ளனர்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட NNC2215 ஆனது எலிகள் மற்றும் பன்றிகளில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை நன்கு குறைப்பதில் மனித இன்சுலினைப் போலவே செயல்படுகிறது.
  • இந்த இன்சுலின் செயலாற்றுவதற்கு என்று குறிப்பிடத்தக்க குளுக்கோஸ் தூண்டுதல் தேவைப் படுகிறது என்பதோடு அது செயல்படுத்தப் பட்டவுடன், இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது.
  • பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கும் முதல் வகை நீரிழிவு நோய் ஆனது, கணையம் இன்சுலின் (அல்லது போதுமான இன்சுலின்) உற்பத்தி செய்யாத போது ஏற்படுகிறது.
  • இரண்டாம் வகை நீரிழிவு நோயில், உடலின் செல்கள் இன்சுலின் எதிர்ப்பை வளர்த்துக் கொள்கிறது, அதாவது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுவதை விட அதிக அளவு தேவைப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்