TNPSC Thervupettagam

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தடுக்க வீடு தேடி மருத்துவ வசதி வழங்கும் திட்டம் – தமிழ்நாடு

July 17 , 2021 1286 days 520 0
  • தமிழகம் முழுவதுமுள்ள மக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ வசதியையும் நீண்டகாலமாக சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ் வசதியையும் ஏற்படுத்தி தரும் வகையிலான திட்டத்தினைத் தொடங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் தொற்றாநோயின் காரணமாக நிகழும் 5 லட்சம் இறப்புகளை 50% வரை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இது கொண்டு வரப்பட்டுள்ளது.
  • வீடு தேடி மருத்துவ வசதி வழங்கும் திட்டத்திற்கு முன்னதாக 10 நாள் அளவிலான பரவலான சோதனை திட்டத்தைத் தொடங்கி மக்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும்.
  • மக்களை தேடி மருத்துவம்திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் () உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதன்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு, மருத்துவ  ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்