TNPSC Thervupettagam

நீருக்கடியில் அமைந்த இராணுவ வாகனங்கள் அருங்காட்சியகம்

July 27 , 2019 1854 days 739 0
  • ஜோர்டன் நாடு அகாபா கடற்கரைக்கு அருகில் செங்கடலின் கீழ்ப்பரப்பில், தனது முதலாவது நீருக்கடியிலான இராணுவ வாகனங்கள் அருங்காட்சியகத்தைத் திறந்துள்ளது.
  • இந்த அருங்காட்சியகத்தில் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட 19 இராணுவ வன்பொருள் வாகனங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் கடலுக்கடியில் 92 அடி ஆழம் வரை மூழ்கியுள்ளது.
  • இந்தத் தனித்துவ சுற்றுலா அனுபவமானது ஏற்கெனவே புகழ்பெற்று விளங்கும் அகாபா டைவிங் (மூழ்கும்) பொழுதுபோக்கு இடத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

செங்கடல்

  • செங்கடல் என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகியவற்றிற்கு இடையே அமைந்த இந்தியப் பெருங்கடலின் கடல்நீர் நுழைவுப் பகுதியாகும்.
  • இது உலகளாவிய இயற்கை நிதியத்தினால் (WWF - World Wide Fund for Nature) சர்வதேச 200 சூழலியல் பிரதேசமாக (சுற்றுச்சுழலுக்கு உகந்த) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச 200 சூழலியல் பிரதேசங்கள் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சூழல் பிரதேசங்கள் “அருகிவரும் பகுதிகளாக” தரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்