TNPSC Thervupettagam

நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு திட்டக் கொள்கை 2024

September 11 , 2024 23 days 77 0
  • சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு திட்டக் கொள்கையினை  (PSP) மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • நிலையான எரிசக்தி மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கும் வேண்டி நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு நிலையங்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 9,000 மெகாவாட்டிற்கு மேலான காற்றாலை மின்னாற்றல் உற்பத்தித் திறன் மற்றும் 7,800 மெகாவாட் அளவிலான நிறுவப்பட்ட சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது.
  • மாநிலத்தின் மொத்த நிறுவப்பட்ட பசுமை ஆற்றல் திறன் 22,628 மெகாவாட் ஆகும்.
  • தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் லிமிடெட் (TNGECL) ஆனது இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை முகமையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்