நீர் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி
December 20 , 2024 120 days 171 0
ஜப்பான் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிப்பதற்காக என, நீர் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தச் செய்கின்ற பெரும் ஒளிச்சேர்க்கைப் படலங்களைக் கொண்ட ஒரு சிறப்பு உலையைப் பயன்படுத்துகின்றனர்.
இது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடாமல் புதுப்பிக்கத்தக்க வகை ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் செயல் முறை ஆனது, தற்போது 1% செயல்திறனில் மட்டுமே செயல்படுகிறது.
இது வணிகப் பயன்பாடு சார்ந்த நம்பகத்தன்மைக்குத் தேவையான சுமார் 5% செயல் திறனை விட குறைவாகவே உள்ளது.