நிலவின் பகல்பொழுது தோன்றும் பகுதியில் நீர் மூலக்கூறுகள் சுற்றி வருவதாக நாசாவின் நிலவு வேவுப்பணி விண்வெளிக் கலமானது (LRO - Lunar Reconnaissance Orbiter) கண்டறிந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகள் வரை, நிலவானது நீர் ஏதும் இல்லாமல் வறண்ட பகுதியைக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்திருந்தனர்.
LRO வில் உள்ள லைமன் ஆல்பா வரைபடத் திட்டக் கருவியானது நிலவின் மேற்பரப்பில் தற்காலிகமாக சிக்கியுள்ள மூலக்கூறுகளின் பரவலான அடுக்கை அளவிட்டுள்ளது.
நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த நீரானது எரிபொருள் தயாரிப்பதற்கு அல்லது சூரியக் கதிர்களிலிருந்துப் பாதுகாப்பதற்கு அல்லது வெப்ப நிலைசார் மேலாண்மை ஆகியவற்றிற்கு மனிதர்களால் பயன்படுத்தத் தகுதியுடையது.