குயவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர்நிலைகளின் படுகைகளில் இருந்து சரளைக் கற்களை இலவசமாக அகற்ற அனுமதிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அவர்கள் ஒரு திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ் மட்டுமே, இலவசமாக "களிமண் மற்றும் வண்டல்களை" தோண்டி எடுக்க முடியும்.
முன்னதாக, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள், 1959 ஆனது, மாநிலம் முழுவதும் உள்ள குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் படுகைகளில் இருந்து இலவசமாக "களிமண், வண்டல் மற்றும் சரளைக் கற்களை" தோண்டி எடுக்க அனுமதி அளித்தது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆனது, சரளைக் கற்களை "சிறு கனிமம் – சிறு பயன்பாட்டுக் கனிமம்" என்று குறிப்பிடுகிறது.
மாநில அரசானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சவுடு என்ற சொல்லிற்குப் பதிலாக “சாதாரண மண் பொருள்” என்று மாற்றுவதற்காக என்று 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தியமைத்தது.