TNPSC Thervupettagam

நீர்ப்பாசனம் மற்றும் மாறிவரும் மழைப் பொழிவு அமைப்புகள்

August 11 , 2019 1935 days 721 0
  • முதன்முறையாக, பம்பாயில் உள்ள இந்தியத் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்ப்பாசனக் கொள்கையில் ஏற்படும் மாற்றமானது பின்வருவனவற்றை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • பருவமழையை  வடமேற்கு இந்தியாவிற்கு மாற்றும் திறன்.
  • மத்திய இந்தியாவில் மிகக் கடுமையான மழைப் பொழிவை ஏற்படுத்துதல்.
இது எவ்வாறு செயலாற்றுகின்றது?
  • செப்டம்பர் மாதத்தின்போது, விவசாய நிலங்கள் அதிக நீர்ப்பாசனம் பெற்று, பயிர்கள் முதிர்ச்சியடைந்தவையாக விளங்குகின்றன.
  • இதன் விளைவாக மிக அதிக அளவிலான நீராவிப் போக்கு ஏற்படுகின்றது. இதன் மூலம் நிலத்திலிருந்து வளிமண்டலத்திற்கு மாறும் ஈரப்பதத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
  • ஈரப்பத அதிகரிப்பின் விளைவாக, பருவமழை அமைப்பு மற்றும் அதன் தீவிரத் தன்மை அதிகரிக்கின்றது.
  • இந்த ஆய்வானது நில - மேற்பரப்பு மாதிரியை, குறிப்பாக இந்திய நீர்ப்பாசனம் மற்றும் விவசாய அமைப்பை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வு தென் இந்தியாவை உள்ளடக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்