TNPSC Thervupettagam

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணை

August 21 , 2018 2160 days 620 0
  • இந்தியா தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது அணுஆயுதத் திறன் கொண்ட நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்தியா கடந்த 20 வருடங்களாக இதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.
  • விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலான INS அரிஹந்த்திலிருந்து இரகசியமாக இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
  • B-05 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணை இந்திய விமானப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணையானது 10 மீ நீளமும் 750 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறனும் கொண்டது. இந்த ஏவுகணை 10 டன்கள் எடையைக் கொண்டுள்ளது.
  • இந்த வெற்றிகரத் திட்டத்தின் மூலம் நிலம், காற்று மற்றும் கடலுக்கடியிலிருந்து அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணையை ஏவும் திறன் பெற்ற ஆறு நாடுகளின் பிரத்யேகமான சங்கத்தில் இந்தியா இணைந்துள்ளது.
  • மற்ற நாடுகள் : ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சீனா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்