இந்தியா தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது அணுஆயுதத் திறன் கொண்ட நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்தியா கடந்த 20 வருடங்களாக இதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலான INS அரிஹந்த்திலிருந்து இரகசியமாக இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
B-05 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணை இந்திய விமானப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணையானது 10 மீ நீளமும் 750 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறனும் கொண்டது. இந்த ஏவுகணை 10 டன்கள் எடையைக் கொண்டுள்ளது.
இந்த வெற்றிகரத் திட்டத்தின் மூலம் நிலம், காற்று மற்றும் கடலுக்கடியிலிருந்து அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணையை ஏவும் திறன் பெற்ற ஆறு நாடுகளின் பிரத்யேகமான சங்கத்தில் இந்தியா இணைந்துள்ளது.
மற்ற நாடுகள் : ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சீனா