TNPSC Thervupettagam

நீர்வள இடர் விளக்கப் படம்

August 23 , 2023 331 days 195 0
  • உலக வள நிறுவனம் (WRI) ஆனது நீர்வள இடர் விளக்கப்படம் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஆண்டுதோறும், 25 நாடுகள் அல்லது உலக மக்கள்தொகையில் கால் பங்கு மக்கள் தொகையினர் தற்போது மிக மோசமான நீர்வளம் சார்ந்த ஒரு நெருக்கடி நிலைக்கு ஆளாகின்றனர்.
  • அதாவது இவர்கள், 80 சதவீதத்திற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தினைப் பாசனம், கால்நடைகள், தொழில்துறை மற்றும் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர்.
  • உலகளவில், உலக மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம் பேர் ஓராண்டில் குறைந்தது ஒரு மாதமாவது மிக மோசமான அளவிலான நீர்வளப் பற்றாக்குறை சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
  • 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 60 சதவீதத்தினை நெருங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • ‘தண்ணீர்ப் பற்றாக்குறை நிலை’ என்பது தண்ணீருக்கான தேவையானது, தண்ணீர் கிடைக்கப் பெறும் அளவை விட அதிகமாகும் நிலை அல்லது தரம் குறைந்த தண்ணீரானது நீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் போக்கு என்று வரையறுக்கப் படுகிறது.
  • 25 மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகியனவாக உள்ள நிலையில், இங்கு 83 சதவீத மக்கள் மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தெற்காசியாவின் 74 சதவீத மக்கள் மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 2050 ஆம் ஆண்டில் இதில் பாதிக்கும் அதிகமானப் பாதிப்பினை இந்தியா, மெக்சிகோ, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் கொண்டிருக்கும்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளின் நீர் தேவையானது 20-25 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்