நீர் வளங்களுக்கான நிலைக் குழுவானது, சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 40% ஆனது, செலவிடப்படாமல் உள்ளது என்பதோடு இது நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட அமலாக்கத்தில் தாமதங்களை எடுத்துக் காட்டுகிறது.
இத்துறைக்காக 2025-26 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியானது 25,276.83 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதோடு இது முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட 21,323.10 கோடி ரூபாயிலிருந்து 18.54% அதிகமாகும்.
நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒதுக்கீடு ஆனது சுமார் 56.61% அதிகரித்து, 2025-26 ஆம் ஆண்டில் 509 கோடி ரூபாயாக உள்ளது.
நதிப் படுகை மேலாண்மைத் திட்டத்திற்கான நிதியும் 56.98% அதிகரித்து, 2025-26 ஆம் ஆண்டில் 243 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேசிய நீரியல் திட்டத்திற்கான (NHP) நிதி 98% குறைக்கப்பட்டது என்ற ஒரு நிலையில் 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 661.20 கோடி ரூபாயாக இருந்த இதற்கான நிதி ஒதுக்கீடு 2025-26 ஆம் ஆண்டில் 13 கோடி ரூபாயாகக் குறைந்தது.
மழை நீர் சேகரிப்புத் திட்டப் பிரச்சாரம் ஆனது முன்னேற்றம் கண்டுள்ளது என்பதோடு மழைநீர் சேகரிப்புக்காக மாநிலங்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கப் படவில்லை.