உணவு மற்றும் விவசாய அமைப்பானது, சமீபத்தில் ஒரு நீர்வாழ்ப் பரிமாற்றச் செயல் திட்டத்தினை (2022-2030) வெளியிட்டது.
வேலைவாய்ப்பு, உள்ளார்ந்த வளர்ச்சி, நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு ஆகியவற்றின் இயக்கியாக ஒரு நீர்வாழ் உணவு முறைக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.
உணவுப் பாதுகாப்பிற்கு நீர்வாழ் (நன்னீர் மற்றும் உப்புநீர்) உணவு முறைகளின் பங்களிப்பை அதிகரிக்கப் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மற்றும் முகமைகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீன்பிடி தொடர்பான குழுவின் நிலையான மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புக்கான 2021 ஆம் ஆண்டு பிரகடனத்தை இது மீண்டும் வலியுறுத்துகிறது.