TNPSC Thervupettagam
August 20 , 2022 703 days 406 0
  • தாதாபாய் நௌரோஜியின் இலண்டன் இல்லத்திற்கு நீல நிற அடையாளக் குறியீடு (ப்ளூ பிளேக்) குறியீடு வழங்கப்பட உள்ளது.
  • இது இலண்டனில் வாழ்ந்து பணியாற்றியப் புகழ்பெற்ற நபர்களுக்கு வழங்கப் படுகின்ற ஒரு கௌரவமாகும்.
  • 1892 ஆம் ஆண்டில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய நாட்டவர் நௌரோஜி ஆவார்.
  • ப்ளூ பிளேக் குறியீடு வழங்கும் திட்டமானது ஆங்கிலேயப் பாரம்பரியத் தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது.
  • இது இலண்டன் முழுவதும் உள்ள குறிப்பிட்டத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த சில கட்டிடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தினை அங்கீகரிக்கிறது.
  • நௌரோஜி "இந்தியாவின் பழம்பெரும் மனிதர்" என்று குறிப்பிடப்படுகிறார்.
  • நௌரோஜி இங்கிலாந்து நாட்டிற்கு ஏழு முறை பயணம் மேற்கொண்டதோடு அவர் தனது நீண்ட வாழ்நாளில் இலண்டனில் முப்பது ஆண்டுகளுக்கு மேலான ஆண்டுகளைக் கழித்தார்.
  • ராஜா ராம் மோகன் ராய், காந்தி, ஸ்ரீ அரவிந்தர், ஜவஹர்லால் நேரு மற்றும் B.R. அம்பேத்கர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு ப்ளூ பிளேக் குறியீடு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்