நீல நிற நுழைவு இசைவுச் சீட்டு - ஐக்கிய அரபு அமீரகம்
March 3 , 2025 7 hrs 0 min 9 0
சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் நிலைத் தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த தனிநபர்களை இலக்காகக் கொண்ட 10 ஆண்டு கால ஒரு வசிப்பிட அனுமதி வழங்கீட்டிற்கான ஒரு நீல நிற நுழைவு இசைவுச் சீட்டினை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக என்று தனது சேவையினை அர்ப்பணித்த உலகளாவியத் திறமையாளர்களை ஈர்த்து தக்க வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தங்க நிறம் மற்றும் பச்சை நிற நுழைவு இசைவுச் சீட்டுகள் போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய வசிப்பிடத் திட்டங்களுடன் கூடுதலாக நீல நிற நுழைவு இசைவுச் சீட்டு அறிமுகப்படுத்தப் படுகிறது.