TNPSC Thervupettagam

நீல நிற வயிருடைய குக்ரி வகை பாம்பு

May 29 , 2022 785 days 567 0
  • நீல நிற வயிருடைய குக்ரி (பனையன்) வகை பாம்பானது (ஒலிகோடன் மெலனியஸ் வால்) மனாஸ் தேசியப் பூங்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஒலிகோடன் மெலனியஸ் வகை பாம்பானது 112 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது கடைசியாக 1908 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில், மனாஸிற்கு மேற்கே 267 கிமீ தொலைவில் உள்ள திண்டாரியா என்ற பகுதியில் இருந்து கண்டறியப் பட்டது.
  • இது கிழக்கு இந்தியப்  பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • 1909 ஆம் ஆண்டில் ஃபிராங்க் வால் என்பவரால் டின்டாரியா, டார்ஜிலிங் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகளின் அடிப்படையில் இந்த இனங்கள் குறித்து விவரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்