TNPSC Thervupettagam

நீல வானத்துக்கான தூயக் காற்றிற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 07

September 12 , 2024 20 days 45 0
  • மனித ஆரோக்கியத்தை நன்கு பாதுகாக்க காற்று மாசுபாட்டைக் குறைப்பது உட்பட காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
  • உலக சுகாதார ரீதியிலான சேதங்கள் ஆண்டிற்கு சுமார் 8.1 டிரில்லியன் டாலர் என்ற அளவில் மிகப்பெரும் செலவுகள் பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன.
  • சர்வதேச மேம்பாட்டு நிதியில் தற்போது ஒரு சதவீதம் மட்டுமே தூய்மையானக் காற்று திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது.
  • தூய்மையானக் காற்று சார்ந்த முன்னெடுப்புகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 30 டாலர் வரையிலான பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும்.
  • இந்தியா போன்ற நாடுகளில், காற்று மாசுபாடு ஆனது தொழில்துறைக்கு ஆண்டிற்கு 95 பில்லியன் டாலரும் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமும் செலவிடச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்