TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடு - அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்

July 14 , 2018 2326 days 855 0
  • சமீபத்தில சர்வதேச பத்திரிக்கையான எகாலஜிக்கல் என்ஜினியரிங் (Ecological Engineering) வெளியிட்ட ஆய்வின் படி நீலகிரி வரையாட்டை அச்சுறுத்திக் கொண்டிருப்பது பருவநிலை மாற்றமாகும்.
  • 2030ஆம் ஆண்டு முதல், அருகிவரும் இந்த வரையாடு தனது வசிப்பிடத்தில் தோராயமாக 60 சதவிகிதத்தை இழந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • வனப்பகுதிகளில் மொத்தம் 2500 என்ற அளவில் மட்டுமே நீலகிரி வரையாடுகள் இருப்பதாகவும் அவற்றின் மக்கள்தொகை சிறியதாகவும் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றன. இச்சூழ்நிலை அவற்றுக்கு உள்ளூரில் அழிவை ஏற்படுத்தி பாதிப்புக்குள்ளாக்கும்.
  • இது தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் விலங்கு இதுவாகும்.
  • மேற்கு தொடர்ச்சி மலைகளில் சோழா காடுகளின் உயர்ந்த பகுதிகளில் குறுகிய பகுதிகளில் இதன் வாழ்விடம் சுருக்கப்பட்டுள்ளது.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internation Union for Conservation of Nature -IUCN) தனது சிவப்பு தகவல் புத்தகத்தில் (Red Data Book) இவ்விலங்கை அருகிவரும் இனமாக (2500 என்ற எண்ணிக்கைக்கும் குறைவான முதிர்ச்சியுடைய விலங்குகள்) பட்டியலிட்டுள்ளது.
  • தவிர, 1972ஆம் ஆண்டு வனவுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் பட்டியலில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்