TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்வு

September 9 , 2019 1907 days 1045 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிராந்திய விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
  • முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் 2018இல் 568 ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612 ஆக உயர்ந்துள்ளது.
  • நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.

முக்கூர்த்தி பூங்கா பற்றி

  • மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பீடபூமியில் அமைந்துள்ள முக்கூர்த்தி தேசியப் பூங்காவானது 78.46 சதுர கிமீ (30.3 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இந்த பூங்கா அதன் முக்கிய இனமான நீலகிரி வரையாட்டைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்டது.
  • மேலும் இது வங்கப் புலி மற்றும் ஆசிய யானை போன்ற அருகி வரும்  உயிரினங்களுக்கும் உறைவிடமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்