TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை

September 30 , 2023 294 days 208 0
  • தமிழ்நாடு அரசானது, தென்னிந்தியாவின் ஒரேயொரு மலைவாழ் குளம்பு விலங்குகளின் குறைந்து வரும் எண்ணிக்கையினைக் கணக்கிடுவதற்காக தரப் படுத்தப் பட்ட நெறிமுறையில் தற்போது செயல்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு மாநில வனத்துறையானது கேரள மாநிலத்தின் அதன் சக துறையிடம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு முன்மொழிய உள்ளது.
  • இந்த விலங்கு ஆனது இந்த இரண்டு மாநிலங்களில் குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
  • முதல் முறையாக, இவற்றின் கணக்கெடுப்பில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப் பட உள்ளது.
  • நீலகிரி வரையாடு, கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்த செங்குத்தான மற்றும் பாறை நிலப்பரப்புடன் கூடிய மலைப் பகுதி புல்வெளிகளில் அதிகம் காணப்படுகிறது.
  • தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 3,100க்கும் மேற்பட்ட விலங்குகள் ஆங்காங்கே பிரிந்து காணப்படும் வாழ்விடங்களில் வாழ்கின்றன என்று நம்பப் படுகிறது.
  • வடக்கே நீலகிரிக்கும் தெற்கே கன்னியாகுமரி மலைக்கும் இடையே உள்ள பகுதிகள் இவற்றின் வாழ்விடங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்