TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ கழுத்துப் பட்டை

September 19 , 2024 8 days 110 0
  • தமிழ்நாடு வனத்துறையானது ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் ஒரு ஆய்வு நோக்கத்திற்காக நீலகிரி வரையாட்டிற்கு ஒரு கண்காணிப்புக் கருவியைப் பொருத்தி உள்ளது.
  • முன்னதாக, முகூர்த்தி தேசியப் பூங்காவில் நீலகிரி வரையாட்டிற்கு ரேடியோ கழுத்துப் பட்டை பொருத்தப்பட்டது.
  • புவியிடங்காட்டி அமைப்புடன் கூடிய (GPS) அந்தக் கண்காணிப்புச் சாதனம் ஆனது சமிஞ்ஞைகளை வெளியிட்டு, ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ரேடியோ கழுத்துப் பட்டை பொருத்தப்பட்ட அந்த விலங்கு இருக்கும் இடத்தைக் காட்டுகிறது.
  • இந்தச் சாதனத்தினால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த அதிர்வெண்ணில் சமிஞ்ஞைகளை உருவாக்க முடியும்.
  • நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டத்தின் ஒன்பது கூறுகளில் ரேடியோ கழுத்துப் பட்டை பொருத்துதல் மற்றும் கண்காணிப்பும் ஒன்றாகும்.
  • இந்தக் கண்காணிப்பு சாதனம் மூலம் இனங்களைக் கண்காணிக்கும் செயல் முறை ஆனது திட்டக் குழுவிற்கு அவற்றின் வாழ்விட வரம்பு மற்றும் இன்ன பிற நடத்தை முறைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்