2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரை 24 மணி நேரத்தில் நீலகிரியில் உள்ள அவலாஞ்சி பகுதியில் 820 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இங்கு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரை 72 மணி நேரத்தில் 2136 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
இது தென் இந்தியாவின் மிக அளவிலான மழைப் பொழிவு என்று கருதப்படுகின்றது.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு 1943 ஆம் ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக அளவிலான மழைப் பொழிவு கூடலூரில் பதிவாகியிருந்தது. இங்கு 570 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 400 மில்லி மீட்டருக்கு மேலே அதிகப்படியான மழைப் பொழிவு பதிவாகவில்லை.
2015 ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரி 470 மில்லி மீட்டர் மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மகாபலேஷ்வரானது மேகாலயாவின் மௌசின்ரத்திற்குப் பிறகு இந்தியாவின் மிகவும் அதிகமான ஈரப்பதமான பகுதியாக மாறியுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு ஜுன் 01 மற்றும் ஆகஸ்ட் 8ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 6031.5 மில்லி மீட்டர் மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.
பூமியின் மிகவும் ஈரப்பதமான பகுதி மௌசின்ரம் ஆகும். இது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 11,872 மீல்லி மீட்டர் மழைப் பொழிவைப் பெறுகின்றது.
இது சிரபுஞ்சிக்கு மேற்கு திசையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு முன்பு மிகவும் ஈரப்பதமான இடமாக சிரபுஞ்சி இருந்தது.