அந்த மாநில அமைச்சரவையானது மிகச் சமீபத்தில், கிராமப்புறங்களில் அவ்வப் போது பயிர்களுக்கு அதிக அளவில் சேதம் விளைவிக்கின்ற நீலகை மான் (மரையான்) இனத்தினை கொல்வதற்கு அனுமதி அளித்துள்ளது.
அவற்றின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ள போதிலும் ஹரியானாவின் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் உணவுச் சங்கிலியின் இன்றியமையாத பகுதியாக நீலகை மான் உள்ளது.
இந்த நீலகை மான்களின் மிகவும் அதிகரித்த எண்ணிகையானது ஹரியானா மாநில விவசாயிகளின் நீண்ட கால அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கான சில மாற்றுத் தீர்வுகளாக நீலகை மான்களை மற்ற வாழ்விடங்களுக்கு இடமாற்றம் செய்தல் மற்றும் பயிர்களைப் பாதுகாக்க ‘சர பந்தி’ மற்றும் ‘சமுஹிக் டார்பந்தி’ போன்ற வேலி நுட்பங்கள் செயல்படுத்தப் படுகிறன.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் தேதியன்று, நீலகை மான்களை கொல்ல அரசாங்கம் அனுமதி வழங்கியது.
கடந்த 28 ஆண்டுகளாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
1996 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, ஹரியானா முழுவதும் நீலகை மான்களை கொல்வதற்கு மிகக் குறைவான அனுமதிகளே வழங்கப்பட்டுள்ளன.
பொதுவாக, மத நம்பிக்கைகள் காரணமாக அங்குள்ள மக்கள் நீலகை மான்களை அழிக்க அனுமதி கோருவதில்லை.
இதனைச் சட்டப்படி வேட்டையாட பீகார் மாநிலம் இதனை வெர்மின் என்று அறிவித்து உள்ளது.