TNPSC Thervupettagam

நீலக் குறிஞ்சி பூத்தல்

April 10 , 2019 1930 days 588 0
  • மிகப்பெரிய அளவிலான காட்டுத் தீயானது கேரளாவின் மூணாரில் உள்ள பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா மற்றும் வட்டவடாவில் உள்ள நீலக்குறிஞ்சி சரணாலயம் ஆகியவற்றின் காட்டுப் பகுதிகளை அழித்துள்ளது.
  • கேரள வன அதிகாரிகள் இந்தக் காட்டுத் தீயானது திட்டமிடப்பட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று சந்தேகிக்கின்றனர்.
  • குறிஞ்சி அல்லது நீலக் குறிஞ்சி என்பது (ஸ்ட்ரோபிலந்தின் குந்தியானஸ்) தென் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலைக் காடுகளில் காணப்படும் ஒரு புதர்ச் செடியாகும்.
  • நீல மலைகள் என்று குறிப்பிடப்படும் நீலகிரி மலையானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலரின் ஊதா மற்றும் நீல வண்ணத்திலிருந்து இந்தப் பெயரைப் பெற்றது.
  • இது 1838, 1850, 1862, 1874, 1886, 1898, 1910, 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் குறிஞ்சி மலர் பூத்ததை ஆவணப்படுத்திக் காட்சிப்படுத்தப் பட்டு மிகவும் தீவிரமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
  • தமிழ்நாட்டில் வாழும் பழையன் என்ற பழங்குடியின மக்கள் இதனைப் பயன்படுத்தி தங்களது வயதினைக் கணக்கிடுகின்றனர்.
  • அண்மையில் புல்வெளிகளில் நிகழ்ந்த பெரிய அளவிலான காட்டுத் தீ மற்றும் மனிதர்களால் ஏற்பட்ட தீ ஆகியவை நீலக் குறிஞ்சி பூத்தலுக்குப் பாதிப்பாக அமைந்தன.
  • கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிமலை சரணாலயமானது அருகி வரும் நீலக் குறிஞ்சி மலர் பரவியுள்ள 32 ஹெக்டேர் பரப்புடைய அதன் வாழிடத்தைப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்