லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் காட்மட் கடற்கரை ஆகியவற்றிற்கு சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரமான 'நீலக் கொடி' தரமானது வழங்கப் பட்டுள்ளது.
இந்த இரண்டு கடற்கரைகளும் இணைந்து இந்தியாவின் நீலக் கொடி தரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளன.
நீலக் கடற்கரைகள் உலகின் தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த "கடற்கரைகள், சிறுகல துறைமுகங்கள் மற்றும் நிலையான சுற்றுலா படகு இயக்க அமைப்புகள்" ஆகியனவாகும்.