நீலத் திமிங்கலங்களின் எண்ணிக்கை
December 27 , 2020
1434 days
643
- சமீபத்தில் விஞ்ஞானிகள் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நீலத் திமிங்கலத்தின் ஒரு புதிய வகை உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- திமிங்கலங்கள் சப்தத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் எதிரொலி மீதான அடிப்படையில் நீரில் தனக்கான இரையைக் கண்டறிகின்றன.
- இவர்கள் அரபிக் கடல் பகுதியில் ஓமன் பகுதியிலிருந்து மடகாஸ்கர் வரையிலான பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
- இந்த இனமானது இந்தப் பகுதியில் முதன்முறையாக தற்பொழுது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- ஒரு காலத்தில் நீலத் திமிங்கலங்கள் பூமியில் உள்ள அனைத்துக் கடல்களிலும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன.
- ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களுக்கான பட்டியலில் நீலத் திமிங்கலங்கள் “அருகி வரும் இனமாக” பட்டியலிடப்பட்டுள்ளன.
Post Views:
643