TNPSC Thervupettagam

நீலநிறத் தகடுடன் கூடிய நினைவு இல்ல கௌரவம்

September 2 , 2020 1425 days 630 0
  • இலண்டனில் உள்ள நூர் இனாயத் கான் (நூர்-உன் நிசா இனாயத் கான் அல்லது நூரா பேக்கர்) தனது முன்னாள் குடும்ப இல்லத்தில் நீலநிறத் தகடுடன் கூடிய நினைவு இல்லத்துடன் கௌரவிக்கப் பட்ட முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக உருவெடுத்து உள்ளார்.
  • பிரிட்டனின் இரண்டாம் உலகப் போரின் போது, இவர் சிறப்பு நடவடிக்கைகள் படையில் ஒரு உளவாளியாகப் பணியாற்றினார்.
  • பிரெஞ்சுப் படையின் எதிர்ப்பிற்கு உதவுவதற்காக நாசிப் படையினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சிற்குள் ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட கம்பிவடமற்ற முறையில் செயல்படும் பிரிட்டனின் முதலாவது  பெண் செய்தித் தொடர்பாளர் இவராவார்.
  • இலண்டனின் ப்ளு பிளேக் திட்டமானது 1866 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் உலகம் முழுவதும் இதே மாதிரியாக உள்ள பல்வேறு திட்டங்களுக்கு உந்துதலாக இருந்தது.
  • இலண்டனில் ப்ளு பிளேக்குடன் கௌரவிக்கப்பட்ட மற்ற இந்தியத் தலைவர்கள் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பிஆர் அம்பேத்கர் ஆகியோராவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்