மிகவும் அருகி வரும் உயிரினமான நீள்வட்ட வடிவ ஆமை இனமானது (இன்டோ டெஸ்டுடோ எலான்காட்டா) ஹரியானாவில் தென்பட்டுள்ளது.
இந்த ஆமை இனமானது சால் இலையுதிர் மற்றும் மலைப்பாங்கான பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகிறது.
இது வட இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசியா முழுவதும் மற்றும் இந்திய சீன பகுதி முழுவதும் பரவிக் காணப் படுகின்றன.
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள தாழ்நிலங்கள் மற்றும் அடிவாரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.