TNPSC Thervupettagam

நுகர்வோர் பாதுகாப்பிற்கான சர்வதேச கருத்தரங்கம்

October 27 , 2017 2457 days 1340 0
  • கிழக்கு, தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேசக் கருதரங்கை இந்தியப் பிரதமர், புது டெல்லியில் துவக்கி வைத்தார். இதன் கருத்துரு “புதிய சந்தைகளில் நுகர்வோரை அதிகாரப்படுதுதல்” என்பதாகும்.
  • பிராந்திய நாடுகளுக்கான சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த மாநாடு, ஆசிய நாடுகள் ஐ.நா-வின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், நிதிச்சேவைகள் மற்றும் மின்-வர்த்தகம் ஆகியவற்றால் நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றியும் விவாதித்தது.
  • தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சுமார் 22 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன. சீனா, தென்கொரியா, சிங்கப்பூர், வங்கதேசம், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.
  • இந்த மாநாட்டு, இந்தியாவின் நுகர்வோர் விவகாரங்கள் துறையோடு வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான ஐ.நா. கருத்தரங்கம் என்ற அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.
புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதா
  • இதன் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகும்.
  • இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ மறுபதிலீடு செய்து, 2015 ஐ.நா நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சேர்த்துள்ளது.
  • இது நுகர்வோர் சச்சரவு குறைதீர் குழு ஒன்றினை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.
  • மேலும் இது கீழ்க்காணும் அம்சங்களைப் பரிந்துரைக்கிறது,
    • விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு செயல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்றினை நிறுவ வேண்டும்.
    • உயர்தர தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை அணுகக் கூடிய விலையில் வழங்குதல்.
    • ஆபத்தான சரக்குகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல். முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டினை நுகர்வோருக்கு வழங்குதல்
    • அடையாளத் திருட்டினை ஒழுங்குப்படுத்தல் மற்றும் தரவுப் பாதுகாப்பு அளித்தல்.
    • தவறான வழிகாட்டுதல்களை உடைய விளம்பரங்களை தடுத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்