நுண் குமிழி தொழில்நுட்பம் - டெல்லி உயிரியல் பூங்கா
December 9 , 2024 13 days 110 0
டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவானது, தண்ணீரைச் சுத்தப் படுத்தச் செய்வதற்கும் அதனைச் சுத்திகரிப்பதற்கும் விரைவில் ‘நுண் குமிழி என்ற தொழில் நுட்பத்தினை’ செயல்படுத்த உள்ளது.
இது அசுத்தங்களை அகற்றவும் பாசி வளர்ச்சியைத் தடுக்கவும் மேம்பட்ட வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்துகிறது.
செயல் திறம் மிக்க மறுசுழற்சியை செயல்படுத்துவதன் மூலம் இந்தத் தொழில்நுட்பம் தண்ணீர் வீணாவதையும் குறைக்கிறது.
இந்த நுண் குமிழி தொழில்நுட்பம் ஆனது, தண்ணீரில் கரையும் சிறியக் குமிழிகளை உருவாக்குகிறது.
இந்தக் குமிழ்கள் ஆக்ஸிஜன் அளவை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் தண்ணீரைச் சுத்திகரிக்கின்றன.
அவை மாசுக்களை திறம்பட குறைத்து நீரின் தெளிவுத் தன்மையினை மேம்படுத்தும்.