தென் கொரியா நாடானது நீரிலுள்ள நுண் நெகிழிகளை 10 வினாடிகளில் திறம்பட்ட முறையில் அகற்றும் ஒரு புதிய நீர்ச் சுத்திகரிப்பு முறையை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பானது, இது ஒப்பீட்டளவில் விலை மலிவான மற்றும் சிறந்த உறிஞ்சுதல் செயல்திறன் கொண்ட நல்ல ஒளிவெப்பப் பண்புகளைக் கொண்டுள்ள பாலிமரைப் பயன்படுத்துகிறது.
நுண் நெகிழிகள் எனும் 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய நெகிழித் துகள்கள் உலகளாவியப் பிரச்சனையாக திகழ்கிறது.
அவை நீர்நிலைகள், மண் மற்றும் காற்றில் காணப்படுவதோடு, அவை மனித உணவுச் சங்கிலியிலும் கூட நுழைந்துள்ளன.
நீரில் நுண் நெகிழிகள் காணப்படுதல், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்தில் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.