நுண் நெகிழிகள் மற்றும் வானிலை மற்றும் பருவநிலை வடிவங்கள்
November 19 , 2024 7 days 55 0
நுண் நெகிழிகள் ஆனது மேகங்களில் பனிப் படிகங்களை உருவாக்க உதவுகின்ற பனி ஈர்ப்புத் துகள்களாகவும், நுண்ணிய தூசிப் படலங்களாகவும் செயல்படுகின்றன.
மேகங்களில் காணப்படும் நுண் நெகிழிகள் பெரும் வெப்பமான வெப்பநிலையிலும் உறைந்து விடும்.
நுண் நெகிழிகள் காணப்படுவது போன்ற மேக குறைபாடுகள் போன்றவை மேகங்கள் உருவாகும் அடிப்படைத் தன்மையை மாற்றி மழைப்பொழிவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
இது இடியுடன் கூடிய மழைப் பொழிவு முதல் உலகளாவிய வெப்பநிலை மாற்றம் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதாவது, நுண் நெகிழிகள் மழைப்பொழிவுகள், வானிலை முன்னறிவிப்பு, பருவநிலை மாதிரியாக்கம் மற்றும் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.