TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்பி ஜோசுரபால்பின்

April 1 , 2024 238 days 295 0
  • அசினெட்டோபாக்டர் பாமன்னி என்ற மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட ஒரு வகை பாக்டீரியத்தை எதிர் கொள்ளும் திறன் கொண்ட ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஜோசுரபால்பின் ஆனது, எலிகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்ட CRAB என்ற வகை (கார்பாபேனம்-எதிர்ப்புத் திறன் கொண்ட அசினெட்டோபாக்டர் பாமன்னி) பாக்டீரியாவால் உண்டான நிமோனியா மற்றும் செப்சிஸ் ஆகியவற்றிற்கு எதிரான செயல்திறனை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • A. பாமன்னி புரத மூலக்கூறுகளைத் தடுப்பதன் மூலம் லிப்போபோலிசாக்கரைடு (LPS) மூலக்கூறின் இயக்கம் என்ற ஒரு முக்கிய செயல்முறையைத் தடுக்கிறது.
  • கிராம்-நெகட்டிவ் பாக்டீரியாவின் வெளிப்புற-சவ்வு கட்டமைப்பை உருவாக்கச் செய்வதற்காக பாக்டீரியாவின் மேற்பரப்பிற்கு லிப்போபோலிசாக்கரைடுகளைக் கொண்டு செல்வதற்கு இந்த மூலக்கூறுகள் அவசியம் ஆகும்.
  • ஜோசுரபால்பின் லிப்போபோலிசாக்கரைடு இயக்கத்தினைத் தடுக்கிறது என்பதோடு  இதன் மூலம் செல்களில் லிப்போபோலிசாக்கரைடு மிக அசாதாரணமான வகையில் திரண்டு பாக்டீரியத்தினை அழிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்